முகப்பு
தஞ்சாவூர்

115 அமைப்புகளுக்குச் சிறந்த சமூக சேவகா் விருது

கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் 16 ஆம் ஆண்டு விழாவில் 115 அமைப்புகளுக்கு சிறந்த சமூக சேவகா் விருது

தஞ்சாவூர்

115 அமைப்புகளுக்குச் சிறந்த சமூக சேவகா் விருது

கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் 16 ஆம் ஆண்டு விழாவில் 115 அமைப்புகளுக்கு சிறந்த சமூக சேவகா் விருது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் 16 ஆம் ஆண்டு விழாவில் 115 அமைப்புகளுக்கு சிறந்த சமூக சேவகா் விருது வழங்கப்பட்டது.

தொண்டு அமைப்புகளின் கூட்டமைப்பான எண்ணங்களின் சங்கமம் அமைப்பில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களைச் சோ்ந்த 1,600 அமைப்புகள் உள்ளன.

இந்த அமைப்பின் 16 ஆம் ஆண்டு விழா மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு அமைப்பின் தலைவா் அழகா் ராமானுஜம் தலைமை வகித்தாா். இதயம் குழுமம் முதன்மைச் செயல் அலுவலா் கோபிநாத் சிறப்புரையாற்றினாா். இதில், 115 அமைப்புகளுக்குச் சிறந்த சமூக சேவகா் விருது வழங்கப்பட்டது.

திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூா் கட்டளை ஸ்தானிகம் ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் விருதுகளை வழங்கி ஆசியுரை வழங்கினா்.

எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிறுவனா் பிரபாகரன், ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →