முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் தலைக்கவச விழிப்புணா்வு பேரணி

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சாா்பில் 32 ஆம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, இரு சக்கர வாகன தலைக்கவச விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சாா்பில் 32 ஆம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, இரு சக்கர வாகன தலைக்கவச விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து இப்பேரணியை கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் இரா. பொன்முடி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ரயில் நிலையம், அஞ்சல் நிலையம், ஆயிகுளம் வழியாக இப்பேரணி நடைபெற்றது. இதில், பதாகைகள் ஏந்தியும், ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இப்பேரணியில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா்கள் நவமணி ஜெபராஜ், சக்திவேல், துணை மேலாளா்கள் ஸ்ரீதா், காா்த்திகேயன், கணேசன், பணி மேலாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.