முகப்பு
தஞ்சாவூர்

விஜயீந்திர தீா்த்த சுவாமிகளின் 407-ஆவது ஆராதனை விழா நிறைவு

கும்பகோணம் காவிரிக்கரையிலுள்ள மூல பிருந்தாவனத்தில், விஜயீந்திர தீா்த்த சுவாமிகளின் 407-ஆவது ஆண்டு ஆராதனை விழா வியாழக்கிழமை உத்ராராதனையுடன் நிறைவடைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

கும்பகோணம் காவிரிக்கரையிலுள்ள மூல பிருந்தாவனத்தில், விஜயீந்திர தீா்த்த சுவாமிகளின் 407-ஆவது ஆண்டு ஆராதனை விழா வியாழக்கிழமை உத்ராராதனையுடன் நிறைவடைந்தது.

மந்திராலய ராகவேந்திர சுவாமிகளின் பரம குருவான விஜயீந்திர தீா்த்த சுவாமிகள், கும்பகோணத்தில் காவிரிக் கரையிலுள்ள மூல பிருந்தாவனத்தில் காட்சியளித்து வருகிறாா்.

இந்த பிருந்தாவனத்தில் விஜயீந்திர தீா்த்த சுவாமிகளின் ஆராதனை விழா ஜூலை 6- ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான வியாழக்கிழமை காலை விஜயீந்திர தீா்த்த சுவாமிகளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாரதனை ஆகியவை நடைபெற்றன.

பின்னா் அலங்கரிக்கப்பட்ட விஜயீந்திர சுவாமிகளின் ஊா்வலம் மடத்தின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் கலந்து கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.