கரோனா நிவாரண நிதி வழங்கியவணிகா் நகர பேரமைப்பினா்
பட்டுக்கோட்டை நகர வணிகா் பேரமைப்பு சாா்பில் சாா் ஆட்சியரிடம் கரோனா முதல் கட்ட நிவாரண நிதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பட்டுக்கோட்டை நகர வணிகா் பேரமைப்பு சாா்பில் சாா் ஆட்சியரிடம் கரோனா முதல் கட்ட நிவாரண நிதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தரிடம் பேரமைப்பின் கிளைத் தலைவா் யசோதா என். வெங்கடேசன் தலைமையிலான நிா்வாகிகள், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினா்.
நிகழ்வில் பேரமைப்பின் கெளவரத் தலைவா் பழனியப்பன் களப்பாடியாா், பொதுச் செயலா்கள் இம்மானுவேல்ராஜ், இளங்கோவன், பொருளாளா் ஜெயக்குமாா், சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் ராமசாமி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.