முகப்பு
தஞ்சாவூர்

ரேஷன் கடைகள் ஜூலை 24, ஆக. 14-இல்இயங்காது

நியாய விலைக் கடைகள் ஜூலை 24, ஆகஸ்ட் 14 ஆகிய நாள்களில் இயங்காது என ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

நியாய விலைக் கடைகள் ஜூலை 24, ஆகஸ்ட் 14 ஆகிய நாள்களில் இயங்காது என ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணியை மேற்கொள்ள ஏதுவாக அங்காடிகளுக்கு விடுமுறை நாள்களான மே 16, ஜூன் 4, 11 ஆம் தேதிகளில் வேலை நாள்களாக அறிவிக்கபட்டு, பணி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பதிலாக ஜூலை 17, 24, ஆகஸ்ட் 14 ஆம் தேதிகள் நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை நாள்களாக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு ஜூலை 24, ஆகஸ்ட் 14 ஆம் தேதிகள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால், இரு நாள்களிலும் நியாய விலைக் கடைகள் இயங்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.