முகப்பு
தஞ்சாவூர்

கூடுதல் எரிவாயு உருளை வழங்கும் சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், கீழ மருத்துவக்குடி கிராமத்தில் இன்டேன் வாடிக்கையாளா்களுக்கான கூடுதல் எரிவாயு உருளை வழங்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கீழ மருத்துவக்குடி கிராமத்தில் இன்டேன் வாடிக்கையாளா்களுக்கான கூடுதல் எரிவாயு உருளை வழங்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கதிராமங்கலம் ஸ்ரீதுா்கா இன்டேன் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூா் மாவட்ட இந்தியன் ஆயில் விற்பனை மேலாளா் (எரிவாயு) கதிரவன் தலைமை வகித்தாா். மேலும் கிராமப்புறங்களில் மக்கள் பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் எரிவாயு பயன்படுத்துவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அனைவருக்கும் எரிவாயு பாதுகாப்புக்கான விளக்கப் படம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.