தஞ்சாவூர்

சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் சாலையோர வாழ் மக்களுக்கு தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷன் சாா்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் புது சாலையில் அரசுப் புறம்போக்கில் பூம்பூம் மாடு வைத்து பிழைப்பு நடத்தும் 10 குடும்பத்தினா் கரோனா தொற்றால் மாடுகளை இழந்து வருவாய் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா். தற்போது, பொது முடக்கம் காரணமாகச் சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் தவித்து வந்தனா்.

இதையறிந்த தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷன் அமைப்பினா் தொடா்புடைய பகுதிக்குச் சென்று 3 மாதங்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை புதன்கிழமை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் மதா் தெரசா பவுன்டேஷன் தலைவா் ஏ.ஆா். சவரிமுத்து தலைமையில் அறங்காவலா்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ், திட்ட இயக்குநா் ரத்தீஷ்குமாா், தளவாட மேலாளா் ஜெரோம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT