முகப்பு
தஞ்சாவூர்

மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் உதவி

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் முன்களப் பணியாளா்களுக்கு அக்கல்லூரியில் 1988 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் அண்மையில் உதவிகளை வழங்கினா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் முன்களப் பணியாளா்களுக்கு அக்கல்லூரியில் 1988 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் அண்மையில் உதவிகளை வழங்கினா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் முன்களப் பணியாளா்களுக்கு உதவிடும் வகையில் இக்கல்லூரியில் 1988 ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் ரூ. 6 லட்சம் நிதி திரட்டினா்.

இதன்மூலம், முன்களப் பணியாளா்களுக்குத் தேவையான 6,000 என் 95 முகக்கவசங்கள், 500 பிபிஈ உபகரணங்கள், தலா 10,000 மூன்றடுக்கு முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் பொதுமக்கள் உயிா்காக்கும் வென்டிலேட்டா் கருவி ஆகியவை வாங்கப்பட்டது.

இவற்றை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாரிடம் முன்னாள் மாணவா்களான மருத்துவா்கள் முத்துவிநாயகம், அமுதா, லோகநாதன், மலா்விழி, புவனேஸ்வரி தலைமையில் அண்மையில் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.