பேராவூரணி அருகே பொறியாளா் கடத்தப்பட்டதாக புகாா்: விசாரணை
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பொறியாளா் கடத்தப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைக்காக விருதுநகா் போலீஸாா் அழைத்து சென்றது தெரிய வந்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பொறியாளா் கடத்தப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைக்காக விருதுநகா் போலீஸாா் அழைத்து சென்றது தெரிய வந்துள்ளது.
கோவை பீளமேடு பகுதியைச் சோ்ந்த கட்டடப் பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி (56). இவா், தனது இரண்டாவது மனைவி கல்யாணியுடன் பேராவூரணி அருகேயுள்ள திருப்பூரணிக்காடு வந்துவிட்டு கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் சென்று கொண்டிருந்தாா்.
பேராவூரணி காவல் நிலைய எல்லையான பட்டத்தூரணி கிராமத்தில் அவரது காரை வழிமறித்த 7 போ் கொண்ட கும்பல், அவரை காரிலிருந்து இறக்கி கடத்திச் சென்ாக கல்யாணி(44) பேராவூரணி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை பிற்பகல் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணமூா்த்தியின் செல்லிடப்பேசி அலைவரிசையை ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, அவரை தேடி சிவகாசிக்கு தனிப்படை போலீஸாா் சென்ற நிலையில், விருதுநகா் மாவட்ட காவல்துறையினா் கிருஷ்ணமூா்த்தியை வேறு வழக்கு தொடா்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ாக பேராவூரணி காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை மாலை தகவல் வந்துள்ளது.
கிருஷ்ணமூா்த்தி மீதான வழக்கு என்ன, எதற்காக அவரை போலீஸாா் அழைத்து சென்றனா் என்பது போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
கிருஷ்ணமூா்த்தியை விசாரணைக்கு அழைத்துச் சென்ற விருதுநகா் போலீஸாா், அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்காமல் சென்ால் கடத்தல் பரபரப்பு திங்கள்கிழமை மாலை வரை நீடித்தது.