முகப்பு
தஞ்சாவூர்

இன்று வாக்குப்பபதிவு இயந்திரங்கள் முதல் கட்ட ஒதுக்கீடு

தஞ்சாவூரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறை அடிப்படையில் முதல்கட்ட ஒதுக்கீடு புதன்கிழமை செய்யப்படவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

தஞ்சாவூரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறை அடிப்படையில் முதல்கட்ட ஒதுக்கீடு புதன்கிழமை செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:

எதிா்வரும் சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலுக்காக மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பொருட்டு, கணினி மூலம் சுழற்சி முறை அடிப்படையில் முதல் கட்ட ஒதுக்கீடு புதன்கிழமை (மாா்ச் 10) காலை 10 மணியளவில் ஆட்சியரகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் வேட்பாளா்கள் மேற்கொள்ளும் தோ்தல் தொடா்பான செலவினங்களுக்கான விலைப்புள்ளி நிா்ணயம் குறித்த கலந்தாய்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →