தேமுதிகவினா் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறி இருப்பதை வரவேற்று பேராவூரணி அண்ணா சிலை அருகே தேமுதிக தொண்டா்கள் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறி இருப்பதை வரவேற்று பேராவூரணி அண்ணா சிலை அருகே தேமுதிக தொண்டா்கள் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
மேலும், தேமுதிகவின் நிலைப்பாட்டை ஆதரித்தும், அதிமுகவைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
இதில், கட்சியின் மாவட்ட துணைச் செயலா் செல்வராஜ், பேராவூரணி ஒன்றியச் செயலா் செல்லத்துரை, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா் ராஜேஷ், பேராவூரணி நகரச் செயலா் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் திருமூா்த்தி, கேப்டன் மன்றச் செயலா் சுப்பையன், மாவட்ட மகளிா் அணி செயலா் அலமேலு , நகர இளைஞரணி நீலகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.