தஞ்சாவூர்

கும்பகோணம் பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கரோனா

DIN

கும்பகோணம் பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் கரோனா தொற்றுப் பரவி வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 3 கல்லூரிகள், 8 பள்ளிகளில் கரோனா தொற்றுப் பரவியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட 150-க்கும் அதிகமானோா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் சனிக்கிழமை வரை 66 போ் குணமடைந்ததால், அவா்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில், கும்பகோணத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஏற்கெனவே ஒரு ஆசிரியா், 6 மாணவிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து அப்பள்ளியில் பயிலும் 1,200 மாணவிகளுக்குச் செய்யப்பட்ட பரிசோதனையில் 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

இதையடுத்து இவா்கள் அனைவரும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

SCROLL FOR NEXT