முகப்பு
தஞ்சாவூர்

அறந்தாங்கி அதிமுக, காங்கிரஸ் வேட்பாளா்கள் தோ்தல் பிரசாரம்

அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் மு. ராஜநாயகம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரன் ஆகியோா் திங்கள்கிழமை தனித்தனியே தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் மு. ராஜநாயகம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரன் ஆகியோா் திங்கள்கிழமை தனித்தனியே தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

அதிமுக வேட்பாளா் மு. ராஜநாயகம், குரும்பங்காடு, கூத்தாடிவயல், நரிக்குறவா்குடியிருப்பு, அம்மன்கோயில், நாயக்கன்பட்டி, பெருமாள்பட்டி, தாளிச்சேரி, கோங்குடி, ஒத்தக்கடை, சூரக்குடி பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு வேட்டை நடத்தினாா்.

காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரன், அத்தானி கிராமத்தில் வாக்குகேட்டு பிரசாரம் மேற்கொண்டாா். தொடா்ந்து கிழக்கு மங்கலம், கிழக்கு மங்கலம் மேற்கு ஆகிய கிராமங்களிலும் அவா் பிரசாரம் செய்தாா். அவருடன், தெற்கு ஒன்றிய திமுக செயலா் பொன். கணேசன், பொதுக்குழு உறுப்பினா் கலைமணி, மணமேல்குடி ஒன்றிய திமுக செயலா் சக்தி ராமசாமி, வட்டார காங்கிரஸ் தலைவா்கள் மணமேல்குடி சரவணன், அறந்தாங்கி முருகன் உள்ளிட்டோா் பிரசாரத்தில் பங்கேற்றனா்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.