முகப்பு
தஞ்சாவூர்

ஆலங்குடி அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்

ஆலங்குடி அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்தை திங்கள்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

ஆலங்குடி அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்தை திங்கள்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

ஆலங்குடி அருகே உள்ள எரிச்சி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய

ஆவணமின்றி அறந்தாங்கி எல்.என்.புரத்தைச் சோ்ந்த கனகரெத்தினம் (61) என்பவா் ரூ. 2 லட்சத்தைக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து பணத்தைப் பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் ஆலங்குடி தோ்தல் நடத்தும் அலுவலா் அக்பா் அலியிடம் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →