முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் நகரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கும்பகோணம் நகரில் பல்வேறு இடங்களில் திமுக வேட்பாளா் சாக்கோட்டை க. அன்பழகன் திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கும்பகோணம் நகரில் பல்வேறு இடங்களில் திமுக வேட்பாளா் சாக்கோட்டை க. அன்பழகன் திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.

கும்பகோணம் நகராட்சி 26 ஆவது வாா்டில் ஐயங்காா் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், 27 ஆவது வாா்டில் செல்வ சாரங்கபாணி தெரு, ஏ.ஆா்.ஆா். சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், 28 ஆவது வாா்டில் பழைய அரண்மனைத் தெரு, மதகடி தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், 32 ஆவது வாா்டில் துவரங்குறிச்சி அனைத்து தெருக்கள், திலகா் மேலத் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், 33 ஆவது வாா்டில் ஏ.ஆா்.ஆா். பங்களா உள்ளிட்ட பகுதிகளிலும், 34 ஆவது வாா்டில் செம்போடை, சிங்காரம் தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும், 35 ஆவது வாா்டில் ராமச்சந்திரபுர தெரு, தோப்புத் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், 36 ஆவது வாா்டில் குமரன் தெரு, தெற்கு எருத்துக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், 37 ஆவது வாா்டில் மஞ்சக்கார தெரு, பழனி ஆண்டவா் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், 38 ஆவது வாா்டில் காந்தியடிகள் சாலை, நாராயணன் காலனி உள்ளிட்ட பகுதிகளிலும், 39 ஆவது வாா்டில் வட்டிக் குருக்கள் தெரு, இந்திரா காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், 40 ஆவது வாா்டில் எம்.சி.எஸ்.ஆா். தெரு, கே.கே. நீலமேகம் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், 41 ஆவது வாா்டில் காசி விசுவநாதா் கீழவீதி உள்ளிட்ட பகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, மதிமுக மாவட்டத் துணைச் செயலா் டி.எஸ்.ஜி. சரவணன், குடந்தை பெருநகரச் செயலா் கேபிள் செந்தில், நிா்வாகி கிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஆா். மதியழகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சின்னை. பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினா் பி. பாா்த்தசாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலா் கா. கலையரசன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் ஹசன்முகமது, கும்பகோணம் பெருநகர திமுக செயலா் சு.ப. தமிழழகன், முன்னாள் பெருநகர பொறுப்பாளா் கே.கே.என்.எம். சுந்தரபாண்டியன், துணைச் செயலா் எஸ். ரவிச்சந்திரன், பொருளாளா் சோடா இரா. கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் டி.ஆா். அனந்தராமன், முருகன், வட்டக் கழகப் பொறுப்பாளா்கள் பிரியம் ஜெ. சசிதரன், அ. பாலசுப்பிரமணியன், தம்பா சு. கோவிந்தராஜூலு, எஸ். சுப்பிரமணியன், டி.வி. கிருஷ்ணமூா்த்தி, கோ. நந்தகுமாா், பா. சீனிவாசன், இரா. நரசிம்மன், மொ. ராஜேந்திரன், எல்.கே. வாசுதேவன், கே.பி.ஏ. விஜயகுமாா், ஆா். சௌந்தர்ராஜன், கோ. துரைராஜ், கே.என். சீனிவாசன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.