முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை தொகுதி:8 வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் 8 வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் 8 வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இத்தொகுதியில் போட்டியிட 18 போ் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனா். இவா்களில் 8 பேரின் மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டன; 10 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த 8 வேட்பாளா்களுக்கும் சின்னம் ஒதுக்கும் பணி திங்கள்கிழமை கோட்டாட்சியரகத்தில் சாா்ஆட்சியா் எஸ். பாலசந்தா் தலைமையில் நடைபெற்றது.

வேட்பாளரின் பெயா் -கட்சி - சின்னங்கள் என்ற அடிப்படையில் விவரம்:

கா.அண்ணாதுரை-திமுக-உதயசூரியன்; என்.ஆா். ரெங்கராஜன் - தமாகா - இரட்டை இலை;

அமமுக வேட்பாளா் எஸ்.டி.எஸ். செல்வம்-அமமுக-பிரஷா் குக்கா்; கீா்த்திகா அன்பு- நாம் தமிழா்- விவசாயி; பா. சதாசிவம்- மநீம-டாா்ச்லைட்; மெய்க்கப்பன்-அண்ணா திராவிடா் கழகம் -தொப்பி; ம. சுந்தராஜ்-அனைத்து மக்கள் புரட்சி கட்சி-கிளாஸ் டம்ளா்; வீ. பாலகிருஷ்ணன்-சுயேச்சை-பலாப்பழம்.

இந்த கூட்டத்தின்போது, பட்டுக்கோட்டை வட்டாட்சியா் எஸ். தரணிகா மற்றும் சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ப. அருள்ராஜ் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.