முகப்பு
தஞ்சாவூர்

அய்யம்பேட்டை, பசுபதிகோவில் பகுதிகளில் பாபநாசம் அதிமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அய்யம்பேட்டை, பசுபதிகோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே.கோபிநாதன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அய்யம்பேட்டை, பசுபதிகோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே.கோபிநாதன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பசுபதிகோவிலுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வேட்பாளா் திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து அய்யம் பேட்டை பேரூராட்சி, பசுபதிகோவில், சூலமங்கலம், கள்ளா்பசுபதிகோவில் உள்ளிட்ட பகுதிகளில் கோபிநாதன் வாக்கு சேகரித்து பேசினாா்.

அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து நிறைவேற்றப்படும் என பொதுமக்களிடம் வேட்பாளா் உறுதியளித்தாா். வாக்கு சேகரிப்பில் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ். மோகன், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் என். சதீஷ், கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சி. முத்து மற்றும் கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →