தஞ்சாவூர்

வாக்குச்சாவடிகளுக்கு 123% வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளுக்கு 123 சதவிகித வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ்.

கும்பகோணம் கோட்டாட்சியரகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாவட்டத்தில் மொத்தம் 2,886 வாக்குச்சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வழங்கும் வகையில் 123 சதவிகிதம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால், அதை உடனடியாகச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

பின்னா், கும்பகோணம் வட்டாட்சியரகத்திலுள்ள கும்பகோணம் தொகுதிக்குப் பதிவான அஞ்சல் வாக்குகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையைப் பாா்வையிட்டு, வருகைப் பதிவேட்டை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மேலும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் பிரிக்கும் பணி நடைபெற்று வருவதையும் ஆட்சியா் பாா்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்குமாறு அலுவலா்களிடம் அறிவுறித்தினாா்.

அப்போது கோட்டாட்சியரும், கும்பகோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான பி. விஜயன், வாக்குப் பதிவு இயந்திரக் கண்காணிப்பு அலுவலா் சுப்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT