தஞ்சாவூர்

தஞ்சாவூர் தொகுதியில் திமுக வெற்றி

தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் சுமார் 46,744 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

DIN

தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் சுமார் 46,744 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தஞ்சாவூர் தொகுதியில் தொடக்கச் சுற்று முதல் திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் முன்னிலை வகித்து வந்தார். முதல் சுற்றில் 1,275 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற திமுகவுக்கு தொடர்ந்து ஒவ்வொரு சுற்றிலும் படிப்படியாக வித்தியாச விகிதம் அதிகரித்து வந்தது. 

இறுதியாக 29 ஆவது சுற்று முடிவில் 44,208 வாக்குகளும், அஞ்சல் வாக்குகளில் 2,536 வாக்குகளும் முன்னிலை பெற்று மொத்தத்தில் சுமார் 46,744 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தொகுதியில் மொத்தமுள்ள 2,90,772 வாக்குகளில் 1,91,106 வாக்குகள் பதிவாகின. 

இதில், 1,03,225 வாக்குகளை திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் பெற்றார். இவர் இத்தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்து அதிமுக வேட்பாளர் வி. அறிவுடைநம்பி 56,481 வாக்குகள் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT