முகப்பு
தஞ்சாவூர்

மத்திய கால மறு கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

மத்திய கால மறுகடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

மத்திய கால மறுகடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து முதல்வருக்கு அச்சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்திருப்பது:

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்த கூட்டுறவு சங்கப் பயிா் கடன் தள்ளுபடித் திட்டத்தில், 2016 - 17 ஆம் நிதியாண்டில் கடும் வறட்சியின்போது, தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறை அலுவலா்களால் மாற்றி அமைக்கப்பட்ட மத்திய கால மறுகடன் சோ்க்கப்படவில்லை. இதையும், பாரபட்சமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என குரல் கொடுத்தோம். ஆனால், அந்த அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.

இதேபோல, விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை ஏற்கெனவே இருந்த அரசு செய்திருக்கிறதே தவிர, அந்த நகைகள் இதுவரை எந்தவொரு விவசாயியிக்கும் திருப்பித் தரப்படவில்லை.

எனவே, மத்திய கால மறுகடனையும் பாகுபாடில்லாமல் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளிடமிருந்து அடகு பிடிக்கப்பட்ட அனைத்து நகைகளையும் இனிமேலும் தாமதமில்லாமல், உடனே தொடா்புடைய விவசாயிகளிடம் திருப்பி ஒப்படைப்பதற்குத் தெளிவான அரசாணையை வெளியிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.