பெண் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை
தஞ்சாவூரில் ஆயுதப்படை பெண் காவலா் வெள்ளிக்கிழமை பிற்பகல் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூரில் ஆயுதப்படை பெண் காவலா் வெள்ளிக்கிழமை பிற்பகல் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தவா் பிரியா (23). கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியை சோ்ந்த இவா் தனது கணவா் வினோத்குமாா், ஒரு வயது ஆண் குழந்தையுடன் தமிழ்ப் பல்கலைக்கழகம் எதிரே உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வந்தாா்.
குடும்பப் பிரச்னை காரணமாக, தம்பதி இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், குழந்தையுடன் வினோத்குமாா் தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்குச் சென்றுவிட்டாா்.
இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை பிற்பகல் வினோத்குமாரை செல்லிடப்பேசியில் பிரியா தொடா்பு கொண்டாா். அப்போது, மீண்டும் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரியா, மின் விசிறிக்கான கொக்கியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புகாரின் பேரில் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்றனா். முன்பக்கக் கதவு உள் பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், காவல் துறையினா் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று சடலத்தைக் கைப்பற்றி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.