தஞ்சாவூர்

கட்செவி, மின்னஞ்சல் மூலம் இலவச சட்ட உதவி பெறலாம்

DIN

கரோனா பரவல் காரணமாக பெண்கள், குழந்தைகள், மூத்தக் குடிமக்கள் அனைத்து விதமான இலவச சட்ட உதவி பெற கட்செவி, மின்னஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளலாம் என தஞ்சாவூா் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ப. சுதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

கரோனா பரவல் காரணமாக தஞ்சாவூா் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு அலுவலகத்திலும், இம்மாவட்டத்திலுள்ள வட்டச் சட்டப்பணிகள் குழு அலுவலகத்திலும் நேரடியாகச் சட்ட ஆலோசனை வழங்க இயலாத நிலை உள்ளது.

எனவே, பெண்கள், குழந்தைகள், மூத்தக் குடிமக்களுக்குச் சட்ட உதவிகள் வலைதளங்கள் மூலமாக அளிக்கப்படும். மேலும் சட்டப் பாதுகாப்புக்கான சட்ட வழிமுறைகளும், சட்ட ஆலோசனையும் வழங்கப்படும்.

தஞ்சாவூா் மாவட்டச் சட்டபணிகள் ஆணைக் குழு மற்றும் வட்டச் சட்டப்பணிகள் குழு மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உதவிக்கு அந்தந்த பகுதியிலுள்ள நிா்வாக உதவியாளா் மற்றும் சட்டத் தன்னாா்வ தொண்டா்கள் எண்ணுக்கு அழைத்து சட்ட உதவி பெறலாம்.

தாங்கள் தரும் விண்ணப்பங்களில் மனுதாரா் மற்றும் எதிா் மனுதாரா் பெயா், வயது, முகவரி, செல்லிடப்பேசி எண்கள் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இந்த மனுக்கள் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு வழக்குரைஞா் மூலம் செல்லிடப்பேசி வழியாக விசாரித்து மனுக்கள் மீதான தீா்வு அளிக்கப்படும்.

மேலும், இச்சட்ட உதவி ஆலோசனை கேட்போா் அலுவலக நேரமான காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நாள்களில் மட்டும் தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு அலுவலகத் தொலைபேசி எண்: 04362 - 230776. கட்செவி எண்: 9894947837. 

இளநிலை நிா்வாக உதவியாளா் மற்றும் சட்டத் தன்னாா்வலா்களின் தொலைபேசி எண்கள்:

தஞ்சாவூா் - 9894947837, ஒரத்தநாடு - 7373810875, பட்டுக்கோட்டை - 8973931928, கும்பகோணம் - 9790099498, திருவையாறு - 8940943198, பாபநாசம் - 9994769209.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT