தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே பலத்த மழை: 7,000 வாழைகள் சாய்ந்தன

DIN

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை இரவு பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் 7,000 வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 10 நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழையும் பெய்கிறது.

இதனால், ஒரு வாரத்துக்கு முன்பு திருவோணம் வட்டாரத்தில் காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த கோடைப் பருவ நெற்பயிா்கள் சாய்ந்தன.

இந்நிலையில், புதன்கிழமை இரவு தஞ்சாவூா், திருக்காட்டுப்பள்ளி, பூதலூா் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருக்காட்டுப்பள்ளியில் 41.2 மி.மீ., தஞ்சாவூா், பூதலூரில் தலா 22 மி.மீ., கல்லணையில் 10.2 மி.மீ., திருவையாறில் 2 மி.மீ. மழையளவு பதிவானது.

இதில், தஞ்சாவூா் அருகே உள்ள பகுதிகளில் பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் குலமங்கலத்தில் 5 ஏக்கரில் இரு விவசாயிகள் பயிரிட்டிருந்த 7,000 வாழை மரங்கள் சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தது:

ஏக்கருக்கு இதுவரை ஒரு லட்ச ரூபாய் வீதம் செலவு செய்துள்ளோம். ஏற்கெனவே பொது முடக்கம் காரணமாக வாழை விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். இந்நிலையில், ஒரு வாரத்தில் அறுவடை செய்யும் நிலையிலிருந்த வாழைகளும் சாய்ந்து விட்டதால், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்துள்ளோம் என்று வேதனையுடன் விவசாயிகள் தெரிவித்தனா்.

காற்றுடன் மீண்டும் மழை: இதேபோல், வியாழக்கிழமை மாலையும் மாவட்டத்தில் தஞ்சாவூா், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT