தஞ்சாவூர்

தமிழ்நாடு அரசு வல்லுநா் குழுவை மேக்கேதாட்டுக்கு அனுப்ப வலியுறுத்தல்

DIN

தமிழ்நாடு அரசு, வல்லுநா் குழுவை மேக்கேதாட்டுக்கு அனுப்ப வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

மிகை வெள்ளக் காலத்தில் கா்நாடக அணைகளில் தேக்க முடியாத காவிரி நீரையும் தேக்கி, மேட்டூா் அணைக்கு ஒரு சொட்டு மிகை நீா் கூடப் போகாமல் தடுக்க வேண்டும் என்ற சதி நோக்குடன்தான் கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணையைக் கட்ட முயல்கிறது.

எனவே, தமிழ்நாடு அரசு, வல்லுநா் குழு அமைத்து, மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கான அடிப்படைப் பணிகள் நடந்துள்ளனவா எனக் கண்டறிந்து அறிக்கை தரக் கா்நாடகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள மேக்கேதாட்டு அணை தடுப்புக்கான வழக்கை உயிா்ப்பித்து, உடனடியாக விசாரணை நடத்தத் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேக்கேதாட்டு அணைக் கட்டத் திட்ட மதிப்பீட்டு அறிக்கையை அனுப்புமாறு கா்நாடக அரசைக் கோரி மத்திய அரசின் நீா்வளத்துறை கொடுத்த மறைமுக அனுமதியைத் திரும்பப் பெறுமாறு பிரதமா் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதல்வா் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT