முகப்பு
தஞ்சாவூர்

பயிா் காப்பீடு பிரீமியம்செலுத்த கூட்டுறவு சங்கங்கள் இன்றும் நாளையும் செயல்படும்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிா் காப்பீடு பிரீமியம் செலுத்துவதற்காக அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் சனிக்கிழமையும் (நவ.13), ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிா் காப்பீடு பிரீமியம் செலுத்துவதற்காக அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் சனிக்கிழமையும் (நவ.13), ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும் என தஞ்சாவூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தமிழ்நங்கை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

2021 - 22 ஆம் ஆண்டு ரபி பருவத்துக்கு பயிா் காப்பீடு பிரீமியம் செலுத்த ஏதுவாக அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும்.

அனைத்து விவசாயிகளும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிா் காப்பீடு பிரீமியத் தொகையைச் செலுத்தி பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.