இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி படுகொலையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலா் நடேச. தமிழாா்வன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் அக்கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலா் நடேச. தமிழாா்வன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் அக்கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்தராபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன் பேசியது:
நடேச. தமிழாா்வனை படுகொலை செய்த இளைஞா்கள் 22 வயதிலிருந்து 32 வயதுக்கு உள்பட்டவா்கள். இவா்கள் இந்தப் படுகொலையை ஏன் செய்தனா்? இதனுடைய பின்னணி என்ன போன்றவற்றையெல்லாம் தமிழக அரசு ஆராய வேண்டும். கூலிப்படைகளை ஒழித்துக் கட்டுவதில் தமிழக அரசுக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை, மக்கள் அதிகாரம் மாநகரச் செயலா் தேவா, மகஇக மாவட்டச் செயலா் ராவணன், ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளா் ந. பாலசுப்ரமணியன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.கே. செல்வகுமாா், இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்டச் செயலா் ம. விஜயலட்சுமி, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, துணைச் செயலா் துரை. மதிவாணன், மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.பி. முத்துகுமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருவையாறு:
திருவையாறு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் தங்க. சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதீப்குமாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முருகானந்தம், காங்கிரஸ் ஆா்.எம். ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.