ஒரத்தநாட்டில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒரத்தநாடு வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவை இணைந்து, சாலை விதிமுறைகளைக் கடைப்பிடித்தல், சட்ட உதவி பெறுவது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இப்பேரணியை நடத்தின.
நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பேரணியை ஒரத்தநாடு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) அல்லி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
பேரணியில் நீதிமன்ற உதவியாளா் பிரசன்னா, நிா்வாக தன்னாா்வலா்கள் ராதிகா வெற்றிச்செல்வன், உதவியாளா் தீபா மணிகண்டன், ஒரத்தநாடு அரசு வழக்குரைஞா் தங்கவேல், வழக்குரைஞா் சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.