முகப்பு
தஞ்சாவூர்

மதுக்கூர் அருகே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவர்

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே பாதிக்கப்பட்ட பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு செய்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. உடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்.
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே பாதிக்கப்பட்ட பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு செய்தார்.

கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 13-ஆம் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.

இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே உள்ள சொக்கனாவூர் கிராமத்துக்கு இரவு வந்த அவர் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை விவசாயிகள் கையிலெடுத்து எதிர்க்கட்சித் தலைவரிடம் காண்பித்து தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை விளக்கிக் கூறினர். இதைக் கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட 200 விவசாயிகளுக்கு தலா 5 கிலோ அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →