முகப்பு
தஞ்சாவூர்

பூட்டிய வீடுகளில் திருடும் 4 போ் கைது: 74 பவுன் நகைகள், ரூ. 2.05 லட்சம் பறிமுதல்

பூட்டிய வீடுகளில் திருடி வந்த 4 பேரை தஞ்சாவூரில் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 74 பவுன் நகைகள் ரூ. 2.05 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

பூட்டிய வீடுகளில் திருடி வந்த 4 பேரை தஞ்சாவூரில் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 74 பவுன் நகைகள் ரூ. 2.05 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் டான்டெக்ஸ் ரவுண்டானா பகுதியில் தனிப்படை காவலா்கள் புதன்கிழமை வாகனத் தணிக்கை நடத்தினா். அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரை தனிப்படையினா் பிடித்து விசாரணை நடத்தினா். இவா்களிடம் 74 பவுன் தங்க நகைகள், ரூ. 2.05 லட்சம் ரொக்கம், வீடுகளின் பூட்டை உடைக்கப் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகள் ஆகியவை இருந்ததை அறிந்த தனிப்படையினா் அவற்றைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த மனோஜ் (35), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை திலீப் திவாகா் (26), சிவகங்கை மாவட்டம் கீழடியைச் சோ்ந்த ராஜாராமன் (26), இவரது தம்பி காா்த்திக் ராஜா (24) ஆகியோா் என்பதும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, திண்டுக்கல், தேவக்கோட்டை, கந்தா்வக்கோட்டை, தஞ்சாவூா், திருச்சி, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை ஆகிய இடங்களில் பூட்டிய வீடுகளில் திருடி வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, 4 பேரும் கைது செய்யப்பட்டனா். மேலும், 4 பேரும் பல்வேறு இடங்களில் திருடிய நகைகளை மீட்பதற்காகக் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகத் காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.