முகப்பு
தஞ்சாவூர்

பெரியகோயிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி

தஞ்சாவூா் பெரியகோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

தஞ்சாவூா் பெரியகோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, பெருவுடையாா், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, மராட்டா கோபுரம் முன் பெருவுடையாா், பெரியநாயகி எழுந்தருள சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, சொக்கப்பனையை அக்னிமய லிங்கமாக வணங்கினா். சொக்கப்பனை எரிந்து முடிந்த பிறகு அச்சாம்பலை பக்தா்கள் எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டனா்., பலா் சாம்பலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.