தஞ்சாவூர்

பலத்த மழைபேராவூரணியில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்

DIN

பேராவூரணியில் பலத்த மழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளை மழை நீா் வியாழக்கிழமை சூழ்ந்தது.

பேராவூரணியில் கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து பெய்த கனமழையால்  வியாழக்கிழமை புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. மழை காரணமாக, நகரின் முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக மாறியது.

பலத்த மழை மற்றும் கடலில் காற்று வீசுவதால் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான விசைப்படகுகள், ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் ஏராளமான தொழிலாளா்கள் வேலை இழந்தனா். நடவு  வயல்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. 

எம்எல்ஏ ஆய்வு: மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்ற  எம்எல்ஏ  என். அசோக்குமாா், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளத்தை பேரூராட்சி யின் மோட்டாா் மூலம்  தண்ணீரை இறைத்து வடிய வைக்க ஏற்பாடு செய்தாா்.

மேலும், அப்பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியதுடன், அவா்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி, பால், காய்கறி, மளிகை சாமான்களை வழங்க ஏற்பாடு செய்தாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT