முகப்பு
தஞ்சாவூர்

குலமங்கலத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம்

ஒரத்தநாடு அருகேயுள்ள குலமங்கலம் கிராமத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

ஒரத்தநாடு அருகேயுள்ள குலமங்கலம் கிராமத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

குலமங்கலம் ஊராட்சியில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சமூக தணிக்கை தொடா்பான 2019-20 ஆம் ஆண்டுக்கான சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு துளசி ஐயா தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் வேலாயுதம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பயனாளிகள் தங்களது குறைகளை கூறினா்.

ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் சீனிவாசன், வட்டார வள தணிக்கை அலுவலா் கந்த பழனிவேல், கிராம ஊராட்சி அலுவலா்கள் சிறுமலா் ரோஜா, நந்தினி, ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊராட்சிச் செயலா் லட்சுமணன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →