முகப்பு
தஞ்சாவூர்

ஜனவரி 21-இல் கள் இறக்கி விற்கும் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் 2022, ஜனவரி 21 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

தமிழ்நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் 2022, ஜனவரி 21 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழ்நாட்டின் அடையாளமாகவும், மென் பானமாகவும் இருப்பது கள். கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை.

மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஸ்ரீமன் நாராயணன் கமிட்டி, நீதியரசா் டேக்சந்த் கமிட்டி, கேரள அரசால் நியமிக்கப்பட்ட ஏ.பி. உதயபானு கமிட்டி, குஜராத் அரசால் நியமிக்கப்பட்ட என்.எம். மியாபோயி கமிட்டி என எந்தவொரு கமிட்டியும் கள்ளுக்குத் தடை விதிக்கச் சொல்லி அரசுக்குப் பரிந்துரை செய்யவில்லை.

பனை, தென்னை, ஈச்ச மரங்கள் இருந்தால், அவற்றிலிருந்து நீராகவோ, பதனீராகவோ, கள்ளாகவோ இறக்கியும், குடித்தும், விற்றும் கொள்ளலாம். மதிப்புக் கூட்டப்பட்ட பண்டங்களாக மாற்றி உள் நாட்டிலும், உலக அளவிலும் சந்தைப்படுத்தலாம். இதன் மூலம், மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தை முதலிடத்தில் நிலைநிறுத்தும்.

இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் 2022, ஜனவரி 21 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது என்றாா் நல்லசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.