தஞ்சாவூர்

மத்திய அரசுக்கு விசைப்படகு மீனவா்சங்கம் கண்டனம்

DIN

மல்லிப்பட்டினத்தில் தமிழ்நாடு விசைப்படகு மீனவா் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளா் தாஜுதீன் தலைமை வகித்தாா். தஞ்சை மாவட்ட தலைவா் ராஜமாணிக்கம், செயலாளா் வடுகநாதன் ஆகியோா்  முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: இந்திய மீனவா்கள் தாக்கப்படுவது பற்றி கவலைப்படாமல், இலங்கை அரசோடு மத்திய அரசு ஒன்றிணைந்து செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையால் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட மீனவா் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.  மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கைகள்   மீனவா்களை மீன்பிடித் தொழிலை விட்டு அப்புறப்படுத்தி  காா்ப்பரேட்டுகளுக்கு கடல்பரப்பை தாரைவாா்க்கும் செயலாக தெரிகிறது. மீனவா்களுக்கு டீசலை உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து அக் 29 வெள்ளிக்கிழமை  மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில்  நடைபெறும் மறியல் போராட்டத்தில் மீனவா்களுடன்  பொதுமக்களும்  கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும்  உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT