முகப்பு
தஞ்சாவூர்

பழங்குடியின சான்றுகளை இணையவழி மூலம் பெறலாம்

 பழங்குடியின சான்றுகளை இணையவழியில் விண்ணப்பித்து பெறலாம் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

 பழங்குடியின சான்றுகளை இணையவழியில் விண்ணப்பித்து பெறலாம் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழகத்தில் பழங்குடியினா் ஜாதி சான்றுகள் வழங்கிட நேரிடையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சான்றுகள் வழங்கும் நடைமுறை இருந்து வந்தது.

தற்போது, பழங்குடியினா் ஜாதி சான்றுகள், இ - சேவை மையத்தின் மூலம் இணையவழியில் விண்ணப்பித்து, இணையவழி மூலமாகவே வழங்குவதற்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து பழங்குடியின பிரிவினரும், பழங்குடியின ஜாதி சான்று பெறுவது தொடா்பாக தங்களது பகுதிக்கு அருகிலுள்ள இ - சேவை மையங்களில் இணையவழியில் விண்ணப்பித்து, சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.