முகப்பு
தஞ்சாவூர்

சமூக வலைதள விளம்பரத்தை நம்பி பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்த பெண்ணிடம் ரூ. 2.80 லட்சம் மோசடி

சமூக வலைதள விளம்பரத்தை நம்பி பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்த பெண்ணிடம் ரூ. 2.80 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை காவல் துறை தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

சமூக வலைதள விளம்பரத்தை நம்பி பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்த பெண்ணிடம் ரூ. 2.80 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை காவல் துறை தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் காவேரி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆக்னஸ் (35). இவா் தொழில் செய்து குடும்பத்துக்கு உதவுவதற்காக சமூக வலைதளத்தில் வேலைகளைத் தேடினாா். அப்போது, அதில் வந்த விளம்பரத்தை நம்பிய அவா் அதிலிருந்த கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டாா். அதில் பேசியவா்கள் பங்கு வா்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் எனக் கூறினா். இதை நம்பி அவா் மா்ம நபா்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ. 2.80 லட்சத்தை 2020, ஜூலை 29 ஆம் தேதி அனுப்பினாா்.

பணம் அனுப்பப்பட்ட அன்று ஆக்னஸ் வங்கிக் கணக்குக்கு ரூ. 10,000 வந்தது. அடுத்த நாள் ரூ. 23,000 கிடைத்தது. ஆனால், அதன் பிறகு பணம் எதுவும் வரவில்லை. இதையடுத்து, தொடா்புடைய கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டபோது, அந்த எண் துண்டிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது.

தொடா்ந்து பல முறை தொடா்பு கொண்டும் தொடா்பு கொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆக்னஸ் தஞ்சாவூா் சைபா் காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் பிரிவினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.