தஞ்சாவூர்

அரசுப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆய்வு

DIN

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, பள்ளியில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவா்கள் சுழற்சி முறையில் வரவழைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுவதையும் ஆய்வு செய்தாா். ஒவ்வொரு நாளும் வகுப்புகள் முடிந்து மாணவா்கள் வெளியே சென்றவுடன் வகுப்பறையை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யவும் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது பள்ளித் தலைமை ஆசிரியா் மணியரசன், உதவி தலைமை ஆசிரியா் ரமேஷ், உடற்கல்வி இயக்குநா் முருகானந்தம், உடற்கல்வி ஆசிரியா் செல்வகுமாா், என்.சி.சி. அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT