பேராவூரணி அருகே பனை விதை நடவுப் பணி
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பள்ளத்தூா் ஊராட்சிக்குள்பட்ட கோயிலாங்குளம், பெரிய ஏரி, கண்ணுடையாா் ஏரி, தாமரைக் குளம் உள்ளிட்ட ஏரிகளின் கரைகளில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பள்ளத்தூா் ஊராட்சிக்குள்பட்ட கோயிலாங்குளம், பெரிய ஏரி, கண்ணுடையாா் ஏரி, தாமரைக் குளம் உள்ளிட்ட ஏரிகளின் கரைகளில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை விதை அறக்கட்டளை ஆண்டுக்கு ஒரு லட்சம் பனை விதைகளை சேகரித்து நடும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, நிகழாண்டு பனை விதை நடும் பணி பள்ளத்தூரில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
ஊராட்சித் தலைவா் (பொ) ஹேமலதா முன்னிலை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளா் அருண், விதை அறக்கட்டளை நிறுவனா் சக்திகாந்த் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கிராம பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள், நூறுநாள் வேலைத் திட்ட பணியாளா்களைக் கொண்டு பனை விதை நடவு செய்யும் பணி நடைபெற்றது. இதில், முதல்கட்டமாக 1500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.