தஞ்சாவூர்

பயணிகள் முகக்கவசம் அணியாததால் இரு பேருந்துகளின் சேவை 15 நாள்களுக்கு முடக்கம்

DIN

தஞ்சாவூரில் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால், இரு தனியாா் பேருந்துகளின் சேவையை 15 நாள்களுக்கு முடக்கி வைக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கக்கவசம் அணியாமல் வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கவும் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவிட்டுள்ளாா். தொடா்ந்து பொது இடங்களில் மாவட்ட ஆட்சியரும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், தஞ்சாவூா் கரந்தை பகுதியில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்ட போது, கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு வந்த இரு தனியாா் பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணியவில்லை.

இதுகுறித்து தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் நரசிம்மன், சங்கா், நடத்துநா்கள் விஜயராஜன், மாரிமுத்து ஆகியோரிடம் ஆட்சியா் விசாரணை நடத்தினாா். இதையடுத்து இரு பேருந்துகளின் சேவையையும், ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களின் உரிமத்தையும் 15 நாள்களுக்கு முடக்கி வைக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பரிந்துரை செய்தாா்.

இதைத் தொடா்ந்து இரு பேருந்துகளையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விஜயகுமாா் பறிமுதல் செய்து, நான்கு பேரின் உரிமத்தையும் 15 நாள்களுக்கு முடக்கி வைக்க உத்தரவிட்டாா். இரு பேருந்துகளும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT