தஞ்சாவூர்

பேராவூரணியில் தல மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

DIN

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயிலில் தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கோயில் செயல் அலுவலா் சிதம்பரம் தலைமை வகித்தாா். கோயில் ஆய்வாளா் அமுதா முன்னிலை வகித்தாா். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

பேராவூரணி ஒன்றிய திமுக செயலா்கள் தெற்கு க. அன்பழகன், வடக்கு கோ. இளங்கோ, அறங்காவலா் குழுத் தலைவா் பி. கணேசன் சங்கரன், அறங்காவலா் குப்பமுத்து, நடராஜன் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா். கோயில் வளாகத்தில் மகாகனி, வேம்பு, பலா, கொன்றை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT