தஞ்சாவூரில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலை பால் குடம் எடுத்து சென்ற பக்தர்களில் ஒரு பகுதியினர். 
தஞ்சாவூர்

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பால்குட விழா: ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சாவூரிலிருந்து புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற பால்குட விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூரிலிருந்து புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற பால்குட விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

தஞ்சாவூர் புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் பிராம்மனாள் கைங்கர்ய அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் மேல வீதியிலுள்ள பங்காரு காமாட்சி அம்மன் திருமண மண்டபத்திலிருந்து பால் குட ஊர்வலம் தொடங்கியது. முதன்மைச் சாலைகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் பிற்பகல் மாரியம்மன் கோயிலை அடைந்தது.


இதில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலை குடங்களில் சுமந்து சென்றனர். இதைத் தொடர்ந்து, ஸ்ரீ மாரியம்மனுக்கு சகல திரவியங்களுடன் கூடிய பால் அபிஷேகமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெறவுள்ளது.

இக்கோயில் பிரகாரத்தில் இரவு 7 மணியளவில் அலங்காரத்துடன் ஸ்ரீ அம்மன் புறப்பாடு, நாகசுரம் ஆகியவற்றுடன் ஊர்வலம் நடைபெறவுள்ளது.
   
   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் இடத்தில் கட்டிய வீடுகளை காலி செய்யும் விவகாரம்: அறநிலையத் துறையிடம் அவகாசம் கோரி பொதுமக்கள் மனு

காா்த்தி சிதம்பரம் மகள் இரு அரசு பள்ளிகளுக்கு தலா ரூ. 1.10 லட்சம் நிதி உதவி

கோயிலில் கல்வெட்டு அகற்றப்பட்ட விவகாரம்: இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை பாஜகவினா் முற்றுகையிட முயற்சி

சிவகங்கையில் செவிலியா்கள் உண்ணாவிரதம்

சிவகங்கையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: நான்கு தொகுதிகளிலும் 1,50,828 போ் நீக்கம்

SCROLL FOR NEXT