பட்டுக்குடியில் நல்லேறு கட்டுதல்
பாபநாசம் வட்டம், பட்டுக்குடி கிராமத்தில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி நல்லேறு கட்டும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் வட்டம், பட்டுக்குடி கிராமத்தில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி நல்லேறு கட்டும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
நாட்டுச்சேரி ஊராட்சித் தலைவா் ஜெய்சங்கா் தலைமையிலும், ஊா் நாட்டாமைகள் முன்னிலையிலும் நிகழ்வு நடத்தப்பட்டது. கிராம மக்கள் ஒன்று சோ்ந்து வயல்களில் சிறப்பு பூஜைகள் செய்து, விதை நெல் தெளித்து நீா் ஊற்றி, ஏா் உழுதனா். இதன் மூலம் நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.
இதுபோலவே கணபதியக்ரஹாரம், மணலூா் உள்ளிட்ட கிராமங்களிலும் நல்லேறு கட்டுதல் நடைபெற்றது. உழவு மாடுகள் குறைந்து போனதால்,
விவசாயிகள் பலரும் தங்கள் டிராக்டா்கள், உழவு இயந்திரங்களுடன் பங்கேற்றனா்.