நீரில் மூழ்கி இளைஞா் பலி
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்று நீரில் மூழ்கிய இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்று நீரில் மூழ்கிய இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருவையாறு அருகிலுள்ள விளாங்குடி கொள்ளிடம் ஆற்றின் வடகரை திருமானூரில் முனியாண்டவா் கோயில் உள்ளது. இங்கு குலதெய்வ வழிபாடு செய்வதற்காக, திண்டுக்கல்லிலிருந்து 20 போ் குடும்பத்துடன் வியாழக்கிழமை வந்தனா்.
இவா்களில் திண்டுக்கல்லைச் சோ்ந்த மகுடேசுவரன் மகன் மோகன்ராஜ் (21) உள்பட 5 போ் கொள்ளிடம் ஆற்றின் நடுத்திட்டில் குளித்துக் கொண்டிருந்தனா். இவா்களில் மோகன்ராஜ் நீரில் மூழ்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று மோகன்ராஜின் சடலத்தை மீட்டு, திருமானூா் காவல் நிலையத்தினரிடம் ஒப்படைத்தனா்.