தஞ்சாவூர்

வாடகை வீட்டில் வசிப்போா் ஆா்ப்பாட்டம்

இலவச வீடு கட்டித் தர வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியரகம் முன் வாடகை வீட்டில் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

கரோனா பரவல் காரணமாக வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைகளுக்கு நிரந்தரமாக இலவச வீடு கட்டித் தர வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியரகம் முன் வாடகை வீட்டில் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கும்பகோணம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் பெரும்பாலானோா், தங்களது வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். எனவே, இவா்கள் வசிக்க நிரந்தரமாக இலவச வீடுகள் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இளைஞா் அரண் அமைப்பாளா் சைமன் தலைமை வகித்தாா். வாடகை வீட்டில் குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT