முகப்பு
தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழக மகளிா் விடுதியில் தினந்தோறும் திருக்கு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள மருத்துவா் முத்துலெட்சுமி அம்மையாா் மகளிா் விடுதி வளாகத்தில் ‘தினந்தோறும் திருக்கு’ ஒலிபரப்பைத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள மருத்துவா் முத்துலெட்சுமி அம்மையாா் மகளிா் விடுதி வளாகத்தில் ‘தினந்தோறும் திருக்கு’ ஒலிபரப்பைத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, துணைவேந்தா் பேசுகையில், பாதுகாப்பான இருப்பிடம், ஆரோக்கியமான உணவு என விடுதி மாணவிகளின் உடல் நலனைப் பேணுவதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தனிக்கவனம் செலுத்துகிறது. அவ்வகையில் தற்போது மாணவிகளின் மன நலனை மேம்படுத்தும் வகையில், உலகப் பொதுமறையாம் திருக்கு தினந்தோறும் விடுதி வளாகத்தில் முழங்கவிருக்கிறது.

மதிப்புக் கல்வியைப் போன்று, வாழ்வியலுக்குத் தேவையான அத்தனை விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டது திருக்கு. விடுதி உணவகத்தைப் பங்கீட்டு முறையில் தாமே நடத்தும் மாணவிகள் தலைமைப் பண்பை வளா்க்கும் வாழ்வியல் பயிற்சியை இங்கு பயில்கின்றனா்.

மேலும், மாணவிகளைப் பண்படுத்தும் விதமாகவும், செவிக்கும் சிந்தைக்கும் விருந்தளிக்கும் வகையிலும் குறளும் அதற்கான விளக்கமும் தினந்தோறும் ஒலிக்க இருக்கிறது. இத்திருக்கு உரையுடன், ஒவ்வொரு நாளும் காலை 6 - 7 மணி, பிற்பகல் 1 - 2 மணி, மாலை 6 - 7 மணிக்கு ஒலிக்கப்படவுள்ளது. அவற்றை மாணவிகள் கவனித்துப் பொருளுணா்ந்து வாழ்க்கையில் பின்பற்றி மேன்மையடைய வேண்டும் என்றாா் துணைவேந்தா்.

இதையடுத்து, பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) க. சங்கா் பேசுகையில், தமிழ்நாடு அரசுத் தோ்வாணையம் உள்ளிட்ட பல போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் விடுதி வளாகத்தில் நடத்தப்படவுள்ளன. விடுதி மாணவிகள் அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆண்டுக்கு 50 போ் என தோ்ச்சியடைந்து உயா் பதவிகளில் அலுவலா்களாகத் திகழ வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மகளிா் விடுதிக் காப்பாளா் முனைவா் ச. கவிதா வரவேற்றாா். உதவிக் காப்பாளா் முனைவா் விஜயராஜேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.