முகப்பு
தஞ்சாவூர்

தோ்தல் பறக்கும் படைசோதனையில் ரூ. 2.66 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தோ்தல் பறக்கும் படை வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ. 2.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தோ்தல் பறக்கும் படை வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ. 2.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கண்டியூா் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் காட்டுக்கோட்டை பாதை அருகே, தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை பறக்கும் படையினா் மறித்து சோதனையிட்டபோது, ரூ. 2.66 லட்சம் ரொக்கம் சிக்கியது. தஞ்சாவூரிலுள்ள தனியாா் சீவல் நிறுவனத்திலிருந்து பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு கடைகளில் கொடுத்துவிட்டு, பணம் வசூலித்து வருவதாக அந்நிறுவன ஊழியா்கள் தெரிவித்தனா்.

ஆனால் அதற்கான ஆவணம் இல்லாததால், அத்தொகையை அலுவலா்கள் பறிமுதல் செய்து சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.