தென்னகப் பண்பாட்டு மையத்தில் தஞ்சாவூா் உற்ஸவம் தொடக்கம்
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்தில் ‘தஞ்சாவூா் உற்ஸவம்’ என்கிற, இயல், இசை, நாடக முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்தில் ‘தஞ்சாவூா் உற்ஸவம்’ என்கிற, இயல், இசை, நாடக முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்திராகாந்தி தேசிய கலை மையம், இந்தியத் தொல்லியல் துறை, தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்தும் இவ்விழாவை இந்திரா காந்தி தேசிய கலை மைய அறங்காவலா் பத்மா சுப்ரமணியம் முன்னிலையில், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து உத்திராபதி குழுவினரின் மங்கள இசை, வேத பாராயணம், சுவாமிநாத ஓதுவாா் குழுவினரின் தேவார இசையுடன் நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில் இந்திராகாந்தி தேசிய கலை மையத்தின் மண்டல இயக்குநா்கள் பெங்களூரு அட்சல் பாண்டியா, வதோரா அருப்பா லகிரி, புதுச்சேரி கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.