முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் சுதர்சன சபாவை சுற்றியுள்ள கடைகளை இடிக்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே தனியாரிடமிருந்து சுதர்சன சபாவை மீட்ட மாநகராட்சி நிர்வாகம் சுற்றியுள்ள கடைகள் இடிக்கும் பணியை திங்கள்கிழமை காலை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:24 AM
தஞ்சாவூர் சுதர்சன சபா கட்டடம் இடிக்கும் பணியைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
பகிர்:

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே தனியாரிடமிருந்து சுதர்சன சபாவை மீட்ட மாநகராட்சி நிர்வாகம் சுற்றியுள்ள கடைகள் இடிக்கும் பணியை திங்கள்கிழமை காலை தொடங்கியது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே சுதர்சன சபா 40,793 சதுர அடிப் பரப்பளவில் கட்டப்பட்டு, 1927, டிசம்பர் 14 ஆம் தேதி திறக்கப்பட்டது. மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த சபா ஆண்டு வாடகை அடிப்படையில் 99 ஆண்டுகள் குத்தகைக்கு தனியாருக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

ஒரு காலத்தில் நாடகம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக இருந்தது. ஆனால், இந்த சபாவில் பல ஆண்டுகளாகக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது பெருமளவு குறைந்துவிட்டது. ஏறத்தாழ 95 ஆண்டுகள் பழைமையான இந்த சபா பல ஆண்டுகளாக திமுக பிரமுகர் ஆர்.கே. ராமநாதன் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில், குத்தகை விதிமுறையை மீறி இந்த சபாவின் ஒரு பகுதியில் கட்டடம் கட்டப்பட்டு, உணவகம், மதுபானக்கூடம், பேக்கரி, கைப்பேசி உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டு, உள் வாடகைக்கு விடப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதன் பேரில், மாநகராட்சி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு உள் வாடகைக்கு விடப்பட்டிருந்த கடைகளைப் பூட்டி சீல் வைத்து, பின்னாளில் கையகப்படுத்தினர். 

இந்நிலையில், விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகத் தனியாரிடமிருந்து சுதர்சன சபாவையும் மாநகராட்சி நிர்வாகம் பிப்ரவரி 1 ஆம் தேதி மீட்டது. இதைத் தொடர்ந்து பழைய பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்காக சுதர்சன சபாவைச் சுற்றியுள்ள கடைகள் இடிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் திங்கள்கிழமை காலை தொடங்கியது.

இப்பணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி, மாநகராட்சி ஆணையர் க. சரவணகுமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →