முகப்பு
தஞ்சாவூர்

ரயிலில் பெண் அடிபட்டு பலி

தஞ்சாவூரில் ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்த பெண், வெள்ளிக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

தஞ்சாவூரில் ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்த பெண், வெள்ளிக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டாா்.

இதனால் பலத்த காயமடைந்த அப்பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

இதுகுறித்து தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.