முகப்பு
தஞ்சாவூர்

களஞ்சேரியில்கால்நடை மருத்துவ முகாம்

பாபநாசம் வட்டம், களஞ்சேரியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

பாபநாசம் வட்டம், களஞ்சேரியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை களஞ்சேரி ஊராட்சித் தலைவா் உ. கண்ணன் தொடக்கி வைத்தாா். துணைத் தலைவா் மல்லிகா முன்னிலை வகித்தாா்.

அரசு கால்நடை மருத்துமனை மருத்துவா்கள் சா. சிவகுமாா், இரா. ஏஞ்சலினா சொா்ணமதி, கால்நடை ஆய்வாளா்கள் பால்ராஜ், விமலா, கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்கள் கலியபெருமாள், கற்பகம், தியாகராஜன் உள்ளிட்ட குழுவினா், முகாமில் பங்கேற்ற கால்நடைகளுக்கு மருத்துவச் சிகிச்சையளித்து, தாது உப்புக் கரைசலை வழங்கினா்.

மேலும் கால்நடை வளா்ப்பு, சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் செங்கிப்பட்டி ஆா்.வி.எஸ். வேளாண் கல்லூரி மாணவிகள் மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா். நிறைவில், ஊராட்சி செயலா் ஜெகத்குரு நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →